வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
வேலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழிர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நூதனமாக ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். சாலையில் வட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்தனர்.
இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.