அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-02-25 17:27 GMT
விழுப்புரம், 

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த 23, 24-ந் தேதிகளில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்து நேற்று முன்தினம் இரவில் போராட்ட இடத்திலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கி படுத்து தூங்கினர். இதனை தொடர்ந்து நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்கள் அனைவரும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  இவர்களின் தொடர் தீவிர போராட்டம் ஒருபுறம் இருக்க போராட்ட இடத்திலேயே அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் அடுப்பு, பாத்திரங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து அங்கேயே காலை, மதியம் உணவு சமைத்து அதே இடத்திலேயே சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்