எலக்ட்ரீசியன் வீட்டில் நகை பணம் திருட்டு

எலக்ட்ரீசியன் வீட்டில் நகை பணம் திருடு போனது

Update: 2021-02-25 17:14 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் முகமதுபாரூக் (வயது 30). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் காலை தனது மனைவி, குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். முகமதுபாரூக்கின் தாய் ஆயிஷா, இரவு வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சித்தேரிக்கரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை முகமதுபாரூக் தனது வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்