காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில், டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-25 15:59 GMT
திருவாரூர்:-
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காலமுறை ஊதியம்
டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி வரன்முறை செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பாதுகாப்பாற்ற கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். 
மாவட்ட செயலாளர்கள் லெனின் (சி.ஐ.டி.யூ.), ராமச்சந்திரன் (ஏ.ஐ.டி.யூ.சி.), மாநில செயலாளர் அருள்மணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், தொ.மு.ச. மாவட்ட தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்