தூத்துககுடி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையத்துக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையத்துக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மின்உற்பத்தி நிலையம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில் மேம்பாலம் ரூ.42 கோடி செலவில் 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மூலம் 277 மீட்டர் நீளம் கொண்ட 4 வழி சாலையாக உள்ள இந்த பாலம் 8 வழி சாலையாக சுமார் 8.5 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 1.577 கிலோமீட்டர் நீளம் உள்ள இணைப்புசாலையின் அகலம் 10.30 மீட்டர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் துறைமுகங்கள் வாயிலாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து பரிமாற்றம் நேர்த்தியாகவும், விரைவாகவும் நடைபெறுவதடன் சரக்கு கையாளும் நேரமும் கணிசமாககுறையும்.
இதே போன்று துறைமுகத்தில் ரூ.20 கோடி செலவில் 5 மெகாவாட் தரைதள சூரியமின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 80.64 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டம் மூலம் துறைமுகத்தின் 60 சதவீதம் மின்தேவை பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டப் பணிகள் ஆகஸ்ட் 2021 மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறைவடைந்த பாலங்களை திறந்து வைத்தும், சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பணியையும், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை என்ஜினீயர் ரவிக்குமார், மெக்கானிக்கல் என்ஜினீயர் சுரேஷ்பாபு, துணை பாதுகாவலரும், துறைமுக செயலாளருமான பிரவீன்குமார் சிங், துறைமுக உபயோகிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.