தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம்

தேயிலை தோட்டத்தில் கரடி நடமாட்டம்.

Update: 2021-02-25 14:38 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே கரோலினா, கரிமராஅட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு குடியிருப்புகளை சுற்றி தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. 

இந்த தேயிலை தோட்டங்களில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சில நேரங்களில் தண்ணீர் குடிக்க கரோலினா மற்றும் கரிமராஅட்டி பகுதிகளுக்கு இடையில் உள்ள நீரூற்றுக்கு வருகின்றன. 

அப்போது மனிதர்களை தாக்கும் அபாய நிலை காணப்படுகிறது. எனவே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்