கேரட் கழுவும் 9 எந்திரங்களுக்கு பூட்டு

ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கேரட் கழுவும் 4 எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-02-25 14:36 GMT
ஊட்டி

ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கேரட் கழுவும் 4 எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கேத்தி பாலாடாவில் உள்ள அனைத்து கேரட் கழுவும் எந்திரங்களையும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கேரட் கழுவும் எந்திரங்களில் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா?, தண்ணீர் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கேரட் கழுவும் 47 எந்திரங்கள் உள்ளன. அங்கு நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி அப்படியே நீர்நிலைகளில் கழிவுகளுடன் வெளியேற்றப்படுகிறது. 

இதை தடுக்க சுத்திகரிப்பு கருவிகள் பொருத்த காலக்கெடு கொடுக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பால் கூடுதல் அவகாசம் கேட்டு இருந்தனர். பின்னர் 34 எந்திரங்களில் சுத்திகரிப்பு கருவி பொருத்தி தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

 9 எந்திரங்களில் சுத்திகரிப்பு கருவி போன்ற விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், அவைகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது. அதற்கு சுத்திகரிப்பு கருவி கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

பொருத்திய பின்னர் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்படும் என்றார். ஆய்வின்போது மாசு கட்டுபாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்