கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டி:
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கோவில்பட்டி அரசு பணிமனையில் உள்ள 70 அரசு பஸ்களில், 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்க டிரைவர்கள், கண்டக்டர்கள் இந்த பஸ்களை இயக்கினர். இதில் 6 டவுன் பஸ்கள், 14 வெளியூர் பஸ்களும் அடக்கம். நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி பணிமனை மேலாளர் சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார்.