14 ஆட்டோக்கள் பறிமுதல்
ஆரணியில் 14 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி
ஆரணியில் 14 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி நகரில் மக்கள்தொகை அதிகம் உள்ள நிலையில் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அதிகளவில் கட்டணம் வசூலித்து வருவதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்கள் ஓடுவதாகவும் புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் மற்றும் போலீசார் இன்று ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், பர்மிட் இல்லாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் வந்த 14 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த 14 ஆட்டோக்களும் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. மேல்முறையீடு சம்பந்தமாக ஆரணி வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.