சென்னையில் தயார் நிலையில் போலீஸ் அருங்காட்சியகம்; முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னையில் தயார் நிலையில் போலீஸ் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.

Update: 2021-02-25 06:14 GMT
சென்னை,

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள 178 ஆண்டு கால பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தை ரூ.7 கோடி செலவில் முழுமையாக புதுப்பித்து, போலீஸ் அருங்காட்சியகமாக உருவாக்கி உள்ளனர். தமிழக மற்றும் சென்னை காவல்துறையின் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் இந்த போலீஸ் அருங்காட்சியகம் எழுச்சியுடன் காணப்படுகிறது.

போலீஸ் துறையை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கால பொக்கிஷமாக இது திகழும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கோவையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தைவிட சிறப்பானதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து எழில் மிகு தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இந்த புதுமை போலீஸ் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். டி.ஜி.பி.திரிபாதி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்