கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி, பிப்;
தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4-ம் நிலை ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி ஜமாலுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சொரிமுத்து, வட்ட தலைவர் முருகேசன், செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் வேலு, கீதாராணி, இசக்கியம்மாள், சுடலை தேவி, கருப்பசாமி, பரமசிவன், பாண்டியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதபோல் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவம் பாண்டி, பொருளாளர் ஜான் துரைராஜ், அந்தோணிசாமி, ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.