தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி
ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
ஆலங்குளம், பிப்:
ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போராரு பிரசார மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் நடந்த பேரணியானது ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து மேலமருதப்பபுரம், அண்ணாமலைப்புதூர், கங்கணாங்கிணறு, பலபத்திரராமபுரம், மருதாத்தாள்புரம், தங்கம்மாள்புரம், மருக்காலங்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், தெற்கு காவலாகுறிச்சி, வடக்கு காவலாகுறிச்சி வழியாக வந்து ருக்குமணியம்மாள் பகுதியில் நிறைவடைந்தது.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சூடாமணி, பேரூர் கழக செயலாளர்கள் ஜெயபாலன், ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.