மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

பாவூர்சத்திரத்தில் மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-24 21:44 GMT
பாவூர்சத்திரம், பிப்:

பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் மாரிமுத்து (வயது 25). இவர் கடந்த 20-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தென்காசி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
தென்காசி அருகே வந்த போது தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமநாதன் (34) என்பவர் மாரிமுத்துவிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் பேசி வந்தனர். சாலைபுதூரில் உள்ள ஒரு ஓட்டலில் 2 பேரும் சாப்பிடச் சென்றனர். அப்போது மாரிமுத்து மோட்டார் சைக்கிளிேலயே சாவியை வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராமநாதன் நைசாக ஓட்டலில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நெல்லையில் நேற்று ராமநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்