இலவச கண் சிகிச்சை முகாம்

நெல்லையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2021-02-24 21:27 GMT
நெல்லை, பிப்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தெற்கு சங்கன்திரடு சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கி முகாமை ெதாடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் 38 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் ஹரிவன்சன், முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம், விழி ஒளி ஆய்வாளர் இந்திர சுந்தரி, கண் நல ஆலோசகர் ஆழ்வார், டாக்டர் குமரேசன் ஆகியோர் பங்கேற்று சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை அ.தி.மு.க. கிளை செயலாளர் சிவனு பாண்டியன், முன்னாள் ஊராட்சி செயலாளர் முப்பிடாதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்