மானாமதுரை
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மானாமதுரை அருகே அமைந்துள்ள கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் இருக்கும் தாயமங்கலம் ரோட்டில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் அன்னதானம் வழங்கினார். முன்னதாக கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.