திசையன்விளை, பிப்:
உவரி சார்லஸ் தெருவை சேர்ந்தவர் லூர்து மரியான். இவரது மகன் அஜிஸ் (வயது 30) மீனவர். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதனால் வாழ்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.