ஓடும் பஸ்சில் முதியவர் திடீர் சாவு

மானூர் அருகே ஓடும் பஸ்சில் முதியவர் திடீரென இறந்தார்.

Update: 2021-02-24 21:05 GMT
மானூர், பிப்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 65). இவர் நாகர்கோவிலில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை நெல்லையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார். மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வந்தபோது பஸ்சில் அவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து பஸ் கண்டக்டர் மாரியப்பன் (47) பஸ்சை நிறுத்தி அருகில் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரை அழைத்து வந்து பரிசோதனை செய்தபோது முருகேஷ் இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்