15 ஆண்டுகளுக்கு பிறகு கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்
15 ஆண்டுகளுக்கு பிறகு கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
15 ஆண்டுகளுக்கு பிறகு...
கோபி பச்சைமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் புனரமைப்பு பணி நடந்து வந்தது.
பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி மகாகணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 19-ந் தேதி கோபூஜை, நவக்கிரஹ ஹோமம், 20-ந் தேதி விக்னேஸ்வரபூஜை, யாகசாலை பூஜை நடந்தது. கோவில் அடிவாரத்தில் 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம்
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. காலை 6 மணி அளவில் பரிவார தெய்வங்களுக்கும், ராஜகோபுரம், விமான கோபுரங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதை கூனம்பட்டி ஆதீனம் ராஜ மாணிக்க சுவாமிகள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தொடர்ந்து தசதரிசனம், சுப்பிரமணிய சாமிக்கு மஹா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றது.
அன்னதானம்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, குன்னத்தூர், கொளப்பலூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பி.கே.ஈஸ்வரன், திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்துரமணன் உள்பட பலர் செய்திருந்தனர்.
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நகை பறிப்பு
கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், கூட்டத்துக்குள் புகுந்து 2 பெண்களிடம் 15 பவுன் நகையை பறித்தனர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.