பல்லடம்
பல்லடத்தில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் பஸ் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடத்தை அடுத்த லட்சுமி மில் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வேன் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் மீது பஸ் மோதியது. பஸ் மோதிய வேகத்தில், வேனானது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர், வேனில் வந்த 2 பேர் என மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பல்லடம் தனியார் ஆஸ்பத்திரியிலும் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.