சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழ்திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனி பகுதியை சேர்ந்த திருநங்கை மருதுபாண்டி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மருதுபாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருது பாண்டியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருநங்கை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.