மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-24 19:01 GMT
அரவக்குறிச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 53 பெண்கள் உட்பட 78 பேரை அவரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்