கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு ஒப்புதல் ரசீது
கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு ஒப்புதல் ரசீது வழங்கபட்டது.
தோகைமலை
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த, அனைத்து விவசாய கடன் ரத்து செய்தற்கான ஒப்புதல் ரசீதை பயனாளிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் நேற்று உத்தரவிட்டார். அதன் ஒருபகுதியாக தோகைமலை கூட்டுறவு சங்கத்தில் அதன் தலைவர் துரைக்கவுண்டர் தலைமையில், துணைத்தலைவர் ஆனந்தன், கூட்டுறவு சங்க செயலாளர் தங்கபாண்டி, உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில், விவசாய கடன் ரத்து செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது. மேலும், ஒப்புதல் ரசீது பெறாதவர்கள் உடனடியாக வந்து ரசீதை பெற்று செல்லுமாறு கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்தார்.