வீட்டு குளியல் அறைக்குள் பாம்பு புகுந்தது

பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2021-02-24 18:56 GMT
நொய்யல்
வேலாயுதம்பாளையம்-நொய்யல் மெயின் சாலையில் உள்ள கரைப்பாளையம் ஆலமரத்துமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது வீட்டு குளியல் அறைக்குள் நேற்று 5 அடி நீளமுள்ள பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட குணசேகரன் அக்கம்பக்கத்தினரை அழைத்து பாம்பை விரட்டியும், வெளியே செல்லவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குளியல் அறைக்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்