லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பலி

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-02-24 18:39 GMT
லாலாபேட்டை
மூதாட்டி பலி
லாலாப்பேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மனைவி காமாட்சி (வயது 65) கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் தரகம்பட்டி அருகே முத்தரம்பட்டியில் உள்ள தங்கையை பார்ப்பதற்கு பஸ்சில் செல்ல மகாதானபுரம் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருகேசன் என்பவர் நிலைதடுமாறி காமாட்சி மீது மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட காமாட்சி படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமாட்சி பரிதாபமாக இறந்தார். இதையறிந்த லாலாபேட்டை போலீசார் காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்