வாகனங்கள் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
ராமநாதபுரத்தில் கார் மோதி விபத்தில் வாகனங்கள் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள சாலைவலசையை சேர்ந்தவர் சுந்தரசாமி மகன் சூரியபிரசாத் (வயது29). இவர் தனது காரில் 2 பேரை ஏற்றிக்கொண்டு பரமக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் லாந்தை அருகே சென்றபோது அந்த வழியாக எதிரே மதுரையில் இருந்து வந்த கார் மோதி விபத்துக்குள்ளாக்கியதோடு பின்தொடர்ந்து வந்த சரக்கு வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் 3 வாகனங்களும் சிக்கி அருகில் இருந்த சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் பரமக்குடி நோக்கி சென்ற காரில் இருந்த சூரியபிரசாத் மற்றும் பட்டிணம்காத்தான் சக்திவேல் (37), புத்தேந்தல் செந்தில் (42) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூரிய பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராமநாதபுரம் ஓம்சக்திநகரை சேர்ந்த கணபதி மகன் முருகேசன் (74) என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். சரக்கு வேனில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.