தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மர் கோவிலில் திருட்டு

தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மர் கோவிலில் திருட்டு;

Update: 2021-02-24 17:28 GMT
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கவி நரசிம்மர் கோவில் உள்ளது. கடந்த 22-ந்தேதி பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் பொறுப்பாளர் மாதப்பன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்த போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதப்பன் கோவிலுக்குள் சென்று பார்த்த போது சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலி மற்றும் கோவில் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து தாலி மற்றும் பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்