லாரி மீது வேன் மோதல்; 10 பெண்கள் காயம்

லாரி மீது வேன் மோதியதில் 10 பெண்கள் காயமடைந்தனா்.

Update: 2021-02-24 17:17 GMT
அரசூர், 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் இருந்து தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக 21 பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

 அப்போது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூரிலிருந்து பைத்தாம்பாடி செல்லும் கூட்ரோடு அருகே லாரியை பின்னோக்கி டிரைவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. 

இதில் வேனில் பயணம் செய்த, நெய்வேலி            மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி தரணிதா (வயது30), இந்திரா நகர் துரை மகள் காவியா (22), மேல்பாப்பனப்பட்டு ராஜாமணி மகள் ராஜலட்சுமி (25), வேப்பங்குச்சி ராஜ  குமாரி (36), தென் புதூர்  லோகநாயகி (26), கீழக்கொல்லை (25) நெய்வேலி பகுதியை சேர்ந்த பரிதா, பிரபாவதி, தேன்மொழி, திவ்யா உள்ளிட்ட 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்