திருக்கோவிலூரில், தி.மு.க. சார்பில் சைக்கிள் பேரணி
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கோவிலூரில், தி.மு.க. சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ‘ஸ்டாலின்தான் வராரு,விடியல் தரப்போரரு’ என்ற தலைப்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்டவர்கள் சைக்கிளில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.
திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் குணா என்கிற குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சங்கர், தொ.மு.ச. நிர்வாகிகள் சரவணன், சண்முகம், நகர கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ஜல்லி.பிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மகேஷ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமு, தொண்டர் அணி லெப்ட் கார்த்தி, ஆஜிம், வக்கீல்கள் விஜய், ராகவன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயண மூர்த்தி மற்றும் நகர இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.