மோட்டார் சைக்கிள் திருட்டு
ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாகநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் முருகன் (வயது46). கூலிவேலை செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு இரவு நேரத்தில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.