உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி ஒருவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி ஒருவர் பலி
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சிறுவல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பரசுராமன்(வயது 40). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டைக்கு சென்று இறைச்சி வாங்கி விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். வழியில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார் பரசுராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.