காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்

காட்டுப்பன்றி தாக்கி பெண் படுகாயம்.

Update: 2021-02-24 15:25 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே ஒடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(வயது 52). இவர் நேற்று மதியம் 1 மணிக்கு அங்குள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். 

அப்போது திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்