புலிகள் காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்த கூட்டம்

புலிகள் காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்த கூட்டம்.

Update: 2021-02-24 14:55 GMT
ஊட்டி

மத்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் தென்மண்டலங்களில் உள்ள புலிகள் காப்பகங்களின் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை மதிப்பீடு குறித்த ஆலோசனை கூட்டம், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செயலாளர் சத்திய பிரகாஷ் யாதவ் தலைமை தாங்கி பேசினார். ஐ.ஜி.க்கள் முரளி, அமீத் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 14 புலிகள் காப்பகங்களின் தற்போதைய செயல்பாடுகள், அகில இந்திய அளவில் வன மேலாண்மை மதிப்பீடு, புலிகள் பாதுகாப்பில் மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதில் ஒவ்வொரு புலிகள் காப்பக கள இயக்குனர்களும் தங்களது புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். கூட்டத்தில் தலைமை வன உயிரின பாதுகாவலர்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் மற்றும் 5 மாநில கள இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்