ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
கூடலூர்,
பந்தலூர் தாலுகா கக்குண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பால் விக்டர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து தேவாலா நடுநிலைப்பள்ளிக்கு பணியிடமாறுதல் பெற்றார்.
ஆனால் இதுவரை பணிவிடுப்பு ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுனில் குமார் தலைமை தாங்கினார்.
இதில் துணைத்தலைவர் பத்மநாபன், முன்னாள் வட்ட தலைவர் கருணாநிதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சலீம், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் சத்திய நேசன், தங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.