ஆரணியில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 44 மாற்றுத்திறனாளிகள் கைது

ஆரணியில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 44 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-02-24 13:25 GMT
ஆரணி

ஆரணியில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 44 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 2 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் 
ஆரணி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமையில் 44 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் கைது செய்து தனியார் பள்ளியில் அமர வைத்தனர்.

மேலும் செய்திகள்