நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணியாற்றினர்.

Update: 2021-02-23 22:22 GMT
நெல்லை:
டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து மசோதா நிறைவேற்ற வேண்டும். மருத்துவர் பணியிடங்களை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து தரமான மருத்துவ சேவை நோயாளிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகளை சரியான கால இடைவெளியில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நேரங்களில் போராட்டம் நடத்தும் நிலையில் மீண்டும் அரசுக்கு நினைவூட்டும் வகையில் அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் நேற்று பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், செல்வமுருகன், ரவி, சுதன் ஆகியோர் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்