தெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான நான்கு வழிச்சாலை திறப்பு

தெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான நான்கு வழிச்சாலை திறப்பு

Update: 2021-02-23 21:08 GMT
மதுரை
மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான நான்குவழிச்சாலையை போக்குவரத்துக்காக நேற்று திறக்கப்பட்டது.
நான்கு வழிச்சாலை
மதுரை பெத்தானியபுரத்தில் இருந்து விரகனூர் ரிங்ரோடு வரை வைகை ஆற்றுக்கரையில் இருபுறமும் நான்வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல்வேறு பிரிவுகளாக நடக்கிறது. அதன்படி ரூ.52 கோடியே 36 லட்சம் மதிப்பிலான தெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான தெற்கு கரை நான்குவழிச்சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனவே இந்த சாலையினை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.
ரூ.52 கோடியே 36 லட்சம்
அதன் தொடர்ச்சியாக இங்கு போக்குவரத்தினை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும் போது, மதுரை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மத்திய சாலை நிதி திட்டம் 2018-2019-ன் கீழ் ரூ.52 கோடியே 36 லட்சம் செலவில் தெப்பக்குளம் முதல் விரகனூர் சுற்றுச் சாலை வரையிலான வைகை தெற்கு கரை நான்குவழிச் சாலையினை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் 2.2 கிலோ மீட்டர் ஆகும் என்றார். 

மேலும் செய்திகள்