பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை
மாவட்டத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடிக்கான உத்தரவினை கலெக்டர் கண்ணன் விவசாயிகளிடம் வழங்கினார்.
விருதுநகர்
மாவட்டத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடிக்கான உத்தரவினை கலெக்டர் கண்ணன் விவசாயிகளிடம் வழங்கினார்.
தள்ளுபடி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தினால் ஏற்பட்ட பெரும் சேதத்தினை கருத்தில் கொண்டு கடந்த 5-ந் தேதி விதி எண் 110 ன்கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆணை
இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 179 கூட்டுறவு சங்கங்களில் 26 ஆயிரத்து 725 விவசாயிகள் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் பெற்ற ரூ. 194 கோடியே 34 லட்சம் தள்ளுபடிக்கான ஆணையினை விவசாயிகள் பெற்று பலன் அடைகின்றார்கள்.
அதன் அடிப்படையில் நேற்று 11 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி ஆணையினை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திலீப்குமார் மற்றும் விவசாயத்துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.