பழுந்தடைந்த மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

பழுந்தடைந்த மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-02-23 18:19 GMT
நொய்யல்
பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் தார் சாலையின் ஓரத்தில் கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டது. அதில் மின்கம்பிகள் பொருத்தப்பட்டு அதிலிருந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் விளக்குகள் எரிந்து வருகின்றன. இந்நிலையில் மின்கம்பம் பழுதடைந்து மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை தொடர்ந்து காங்கிரீட்கள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் அபாயம் உள்ளது. இந்த தார் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்