மாநில அளவிலான கபடி போட்டியில் வென்ற வீரர்களுக்கு ஆலங்குடியில் வரவேற்பு

மாநில அளவிலான கபடி போட்டியில் வென்ற வீரர்களுக்கு ஆலங்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-02-23 18:00 GMT
ஆலங்குடி,பிப்.24-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாநில அளவிலான தமிழ்நாடு அளவிலான இளையோர் கபடி போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதனையடு்த்து ஆலங்குடிக்கு திரும்பிய கபடி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர் சிவக்குமார்,  துணைத் தலைவர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் சந்தப்பேட்டை செட்டி பிள்ளையார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்