அ.தி.மு.க. மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

விழுப்புரம் அருகே அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.;

Update: 2021-02-23 17:55 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வருகிற 28-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் மாநாடு நடைபெற உள்ள இடத்தையும், அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு பார்வையிட்டார். 

உத்தரவு 

அப்போது அவர், மாநாட்டு ஏற்பாடுகளை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க கட்சியினருக்கு உத்தரவிட்டார்.  அந்த சமயத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் முத்தமிழ்ச்செல்வன், சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், சேகரன், ராமதாஸ், விநாயகம், நகர செயலாளர் பூர்ணராவ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்