மும்பையில் சுயேச்சை எம்.பி ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு: தற்கொலை என தகவல்
மராட்டிய மாநிலம் தத்ரா&நகர் ஹவேலி மக்களவை தொகுதி சுயேச்சை எம்.பியான மோகன் தெல்கர் மும்பையில் உள்ள ஒட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தத்ரா&நகர் ஹவேலி மக்களவை தொகுதி சுயேச்சை எம்.பியான மோகன் தெல்கர் மும்பையில் உள்ள ஒட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் எம்.பி மோகன் தெல்கர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்கொலை கடிதம் ஒன்றும் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், விசாரணை நடப்பதாகவும் விசாரணைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.
7 முறை எம்.பியாக தேர்வாகியுள்ள மோகன் தெல்கர், கடந்த 2019- ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், காங்கிரசில் இருந்து விலகி சுயேட்சையாக களம் கண்ட மோகன் தெல்கர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.