கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் பரிசு

கபடி போட்டியில் தூத்துக்குடி அணிக்கு முதல் இடம் கிடைத்தது.;

Update: 2021-02-21 19:24 GMT
ஆலங்குடி,பிப்.22-
ஆலங்குடி அண்ணாநகரில் ஏ.கே.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மாநில முழுவதிலும் இருந்து 90-க்கு மேற்பட்ட கபடிக்குழுவினர் கலந்துகொண்டனர். இரவு, பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி அணி முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை வென்றது. 2-வது பரிசு ரூ.20 ஆயிரத்தை ஏ.கே.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் அணியும், 4-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை பழனி அணியும் பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு கே.பி.கே. நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.


மேலும் செய்திகள்