விறுவிறுப்பாக நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் விறுவிறுப்பாக நடந்தது.;

Update: 2021-02-21 15:06 GMT
சின்னமனூர்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. 

இந்தபந்தயம் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான்சிட்டு உள்பட 8 பிரிவுகளாக நடைபெற்றது. 


இதற்கு சின்னமனூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பார்த்திபன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையது கான் ஆகியோர் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


விறுவிறுப்பு 

இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர். போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 

பந்தய எல்கை கோட்டை கடக்க மாடுகள் வேகமாக ஓடி வந்தது. அப்போது மாடுகள் ஒன்றையொன்று முந்தும்போது பார்வையாளர்கள் கைதட்டி மாடுகளையும், சாரதிகளையும் உற்சாகப்படுத்தினர். 

பந்தயத்தை சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். 


பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 பந்தயத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்