பழமைவாய்ந்த கல்செக்கு கண்டுபிடிப்பு

குரும்பூர் அருகே நாலுமாவடி மாடசாமி கோவில் அருகில் பழமைவாய்ந்த கல்செக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2021-02-21 14:17 GMT
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே நாலுமாவடி மாடசாமி கோவில் அருகில் பழமைவாய்ந்த கல்செக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பேராசிரியர் தவசிமுத்து ஆய்வு செய்தபோது, அந்த கல்செக்கில் ‘கொல்லம் ஆண்டு 1063 வைகாசி மாதம் 5-ந்தேதி கிபி 1888’ என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தவசிமுத்து கூறுகையில், ‘18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்லில் கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை போன்றவற்றை அரைத்து எண்ணெய் தயாரித்துள்ளனர். அந்த காலத்தில் இந்த பகுதியை வீரவளநாடு மாநாடு குரும்பூர்பட்டணம் என்றும் அழைத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்