ஏரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏரல் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-02-21 11:09 GMT
ஏரல்:
ஏரல் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏரல் நகர செயலாளர் பெஸ்டி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்ராஜ், ராமச்சந்திரன், சுவாமிதாஸ், கிரேலிம்மாள், காமராஜ் நகர் கிளை செயலாளர் லிங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்