கொங்கணாபுரத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் 12 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு ஏலம் சென்றது.
எடப்பாடி,
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து கலந்து கொண்டனர். மொத்தம் 12 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு ஏலம் சென்றது. டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 100 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 450 முதல் ரூ.7 ஆயிரத்து 806 வரை ஏலம் போனது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று பருத்தி மூட்டைகளை ஏலம் எடுத்தனர்.