ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளத்திற்கு முதன்முறையாக வந்த கருவால் வாத்து
ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளத்திற்கு முதன்முறையாக வந்த கருவால் வாத்து
ஊத்துக்குளி:-
ஊத்துக்குளி அருகே 450 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இங்கு மத்திய ஆசியா நாடுகளான ரஷியா, மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளில் காணப்படும் கருவால் வாத்து ஒன்று திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் முறையாக நஞ்சராயன் குளத்திற்கு வந்துள்ளதாக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. வருடத்தின் இறுதி மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப செல்லும். அவ்வகையில் நேற்று நஞ்சராயன் குளத்திற்கு 183-வது பறவையாக முதல்முறையாக கருவால் வாத்து வந்தது அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் இவை காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மற்றும் திருச்சி மாவட்டத்தில் அரிதாக இவை வந்துள்ளதாகவும் வட இந்தியாவில் இவற்றை அதிகமாக காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நேற்று நஞ்சராயன் குளத்தில் மஞ்சள் குறுகு, நீலகண்ட சோலை பாடி, தட்டை வாயன், நீலச்சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கிடா போன்ற பறவைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.