குளங்கள் நிரம்பியதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி

குளங்கள் நிரம்பியதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி;

Update: 2021-02-20 20:24 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன. 
அந்த வகையில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு் சொந்தமான பழைய குளம் மற்றும் தாமரை குளம், பெரியகுளம் கண்மாய் நிரம்பி உள்ளது.
கடுமையான வெயில் தொடர் மழை இன்மையால் வறண்டு போயிருந்த இந்த குளங்கள் மற்றும் கண்மாய்கள் கடந்த மாதம் பெய்த மழையினால் நிறைந்து உள்ளது. 
இதனால் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 
ஆதலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்