மதுரை
மதுரையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கே.பி.சிலம்பம் அகாடமியின் அன்பு சேகர் தலைமை தாங்கினார். முத்துக்குமார், கருப்பு, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் மாதவன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தென்காசி, விருதுநகர் உள்பட 18 மாவட்டங்களை சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 6 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு சுருள் வீச்சு, தொட்டு முறை போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவி- மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது.