நொய்யல்
பொதுமக்களின் கோரிக்கையின்பேரில், தவுட்டுப்பாளையத்தில் ரூ.3 லட்சம் செலவில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. மேலும், ரூ.8 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா சங்கர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சுத்தகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 20 லிட்டர் குடிநீரை பிடித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.